தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் 8 இன்ச் QHD+ 1800x3200 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
அதிலும் இந்த மடிக்கக்கூடிய ஐபோனிற்கான டிஸ்ப்ளேக்களை சாம்சங் டிஸ்ப்ளே வினியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் முதற்கட்டமாக 15 முதல் 20 லட்சம் மடிக்கக்கூடிய ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முந்தைய தகவல்களில் எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு உற்பத்தி செய்து கொடுக்க இருப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments